திருநெல்வேலி

221 - கடையநல்லூர்

செய்திப்பிரிவு

செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகாவின் ஒரு பகுதி, 11 ஊராட்சிகள், கடையநல்லூர் நகராட்சி, சாம்பவர்வடகரை, ஆய்குடி பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் பெருமளவில் உள்ளார்கள். மலையோர பகுதி விவசாயம் இங்கு பிரசித்தமாக நடைபெறுகிறது. இதனால் விவசாயிகளை அதிகம் உள்ளடக்கியது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

இத் தொகுதி மக்களின் தாகம் தணிக்க கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் கருப்பாநதியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் கூட்டு குடிநீர் திட்டம் இதுவரை முழுமை அடையவில்லை. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றுப்புறத்தில் அணைகளும், குளங்களும் இருந்தும் குடிநீர் பிரச்சினையில் இத் தொகுதி சிக்கியிருக்கிறது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் பல ஆண்டுகளாக கிடக்கின்றன. கடையநல்லூர் தாலுகா அலுவலகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ உறுப்பு கல்லூரி ஆகியவற்றுக்கான சொந்த கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த கட்டிடங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதி பொதுமக்கள் சென்றுவர முடியாத இடமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. வடகரை, செங்கோட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்கும் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. வனத்துறையின் மின்வேலி அமைக்கும் திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை.

1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப் பேரவை தேர்தல்களில் இத் தொகுதியில் அதிமுக 5 முறை, திமுக 3 முறை, காங்கிரஸ், சுயேச்சை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2006-ல் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக வேட்பாளர் பி. செந்தூர்பாண்டின் வெற்றி பெற்றிருந்தார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

செங்கோட்டை தாலுகா

தென்காசி தாலுகா (பகுதி)

பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம், மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்,

கடையநல்லூர் (நகராட்சி),செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,32,345

பெண்

1,32,126

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,64,476

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

பூ. செந்தூர் பாண்டியன்

அதிமுக

2006

S.பீட்டர் அல்போன்ஸ்

இ.தே.கா

44.58

2001

M.சுப்பைய்யா பாண்டியன்

அதிமுக

45.57

1996

K.நைனா முகமது

திமுக

46.58

1991

S.நாகூர்மீரான்

அதிமுக

56.59

1989

சம்சுதீன் (எ) கதிரவன்

திமுக

36.71

1984

T.பெருமாள்

அதிமுக

53.44

1980

A.சாகுல் அமீது

சுயேச்சை

50.71

1977

M.M.A.ரசாக்

அதிமுக

38.78

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ்

53700

2

H. கமாலுதீன்

அ.தி.மு.க

49386

3

M. அறுமுகசாமி

பி.எஸ்.பி

6760

4

V.S. திருப்பதி

சுயேச்சை

3229

5

M. சண்முகவேல்

பாஜக

3203

6

ராஜ் (எ) சண்முகராஜ்

எஸ்.பி

1372

7

மக்தூம்

சுயேச்சை

1196

8

P.S. பாண்டியன்

சுயேச்சை

1110

9

V. செந்தில் ராஜ்

சுயேச்சை

490

120446

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. செந்துர் பாண்டியன்

அ.தி.மு.க

80794

2

S. பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ்

64708

3

S. முகமது முபாரக்

எஸ்.டி.பி.ஐ

6649

4

R. பாண்டி துரை

பாஜக

3233

5

S.S. ஜாஹிர் ஹுசைன்

சுயேச்சை

1753

6

M. ராமையா

பி.எஸ்.பி

1177

7

K. முகமது ஜாபர்

சுயேச்சை

929

8

P. ராமநாதன்

சுயேச்சை

471

9

T. மாரிமுத்து

சுயேச்சை

417

10

M. பாலசுப்பிரமணியன்

சுயேச்சை

385

11

A. சங்கர்

சுயேச்சை

345

12

A. கணேசன்

சுயேச்சை

324

13

P.V. அழகையா

சுயேச்சை

323

14

P. மாஹாராஜா பாண்டியன்

சுயேச்சை

263

15

A. அயூப் கான்

சுயேச்சை

207

16

G. சுதாகர்

சுயேச்சை

177

162155

SCROLL FOR NEXT