திண்டுக்கல்

128 - ஒட்டன்சத்திரம்

செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனு£ர் பேரூராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பழநி ஒன்றியத்திற்குட்பட்ட நான்கு ஊராட்சிகள் உள்ளன. தொகுதி முழுவதும் விவசாய பகுதியாக உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான ஒட்டன்சத்திரம் தொகுதியில் விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லப்படுகிறது. இதற்கென தமிழகத்திலேயே பெரிய காய்கறிமார்க்கெட்களில் ஒன்றான காந்திகாய்கறி மார்க்கெட் உள்ளது.

ஒட்டன்சத்திரம் நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஓரளவு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். நகரில் பஸ்ஸ்டாண்ட் அருகிலேயே காய்கறி மார்க்கெட் இருப்பதால் வாகன நெரிசல் அதிகளவில் உள்ளது. இதைதவிர்க்க நகருக்கு வெளியே தொடங்கப்பட்ட மெகா உழவர் சந்தை பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்படுத்தப்படாமல் பலகோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் வீணாகிவருகிறது. வறண்ட பகுதியான தொப்பம்பட்டி ஒன்றியத்தில் நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியும் பாதியில் விடப்பட்டதால் இப்பகுதி வறண்டு விவசாயபரப்பு குறைந்துவருகிறது.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் ரோட்டோரங்களில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இது நகரின் பிரதான பிரச்சனையாக உள்ளது. காய்கறி மார்க்கெட்டில் குவியும் குப்பைகளை அகற்ற நகராட்சிநிர்வாகம் தாமதிப்பதால் துர்நாற்றமும் நகருக்குள் வீசுகிறது. பரப்பளவில் பெரிய ஒன்றியமான 38 கிராம ஊராட்சிகளை கொண்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தை இரண்டாகப்பிரித்து கள்ளிமந்தயத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் வளர்ச்சிபணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

1977 முதல் ஒன்பது முறை நடைபெற்ற தேர்தல்களில் திமுக ஐந்துமுறையும், அதிமுக மூன்று முறையும், காங்கிரஸ் (1977) ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1996 தேர்தல் முதல் நடந்த நான்கு தேர்தல்களிலும் இத்தொகுதியில் திமுக தொடர் வெற்றிபெற்றுள்ளது. அர.சக்கரபாணி இத்தொகுதியின் எம்எல்ஏ வாக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.கிட்டுச்சாமி

அதிமுக

2

அர.சக்கரபாணி

திமுக

3

க.சந்தானம்

இந்திய கம்யூ.

4

க.சண்முகம்

பாமக

5

எஸ்.கே.பழனிச்சாமி

பாஜக

6

க.செல்வக்குமார்

நாம் தமிழர்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,10,367

பெண்

1,12,641

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,23,014

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2006 சட்டமன்ற தேர்தல்

128. ஓட்டன்சத்திரம்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

R. சக்கரபானி

தி.மு.க

63811

2

K.P. நல்லசாமி

அ.தி.மு.க

43908

3

S. பாலசுப்பிரமணி

தே.மு.தி.க

5457

4

P. கருப்புசாமி

பி.ஜே.பி

1642

5

S. முருகன்

சுயேச்சை

1199

6

M. இன்பராஜ்

எ.ஐ.எப்.டி

739

7

K. செல்லமுத்து

சுயேச்சை

595

8

S. சிவசுப்பிரமணி

சுயேச்சை

514

9

M. சுரேஷ்

சுயேச்சை

460

10

P. சீனிவாசன்

சுயேச்சை

286

11

K. சடயப்பன்

சுயேச்சை

150

12

P. சண்முகவேல்

சுயேச்சை

135

118896

2011 சட்டமன்ற தேர்தல்

128. ஓட்டன்சத்திரம்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

R. சக்கரபானி

தி.மு.க

87743

2

P. பாலசுப்பிரமணி

அ.தி.மு.க

72810

3

P. வேல்குமார்

சுயேச்சை

3092

4

S.K. பழனிசாமி

பி.ஜே.பி

1708

5

R. பிச்சைமுத்து

பி.எஸ்.பி

744

6

K. செல்லமுத்து

சுயேச்சை

672

7

S. குருசாமி

சுயேச்சை

567

8

A. விஜயாசுந்தரம்

சுயேச்சை

432

9

D. சின்னராஜா

சுயேச்சை

313

10

K. கண்ணப்பன்

ஐ.ஜே.கே

228

11

P. சண்முகவேல்

சுயேச்சை

135

12

K. சிவபிரகாசம்

சுயேச்சை

129

13

C. ஆறுமுகம்

சுயேச்சை

110

14

C. கருப்புசாமி

சுயேச்சை

102

168785

SCROLL FOR NEXT