திருவள்ளூர்

7 - மதுரவாயல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியும் அடங்கும். தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது மதுரவாயல் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.

அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம், மதுரவாயல், வளசரவாக்கம், காரம்பாக்கம், போரூர், ராமாபுரம், மதுரவாயல், நெற்குன்றம் பேரூராட்சிகள், அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு ஆகிய ஊராட்சிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

வன்னியர்கள், தலித் இனத்தவர்கள் அதிகளவில் வசித்தாலும் பிற மாவட்டங்களில் இருந்து குடியேறிய பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அத்துடன் கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரி மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயிலும் மிகவும் பிரபலம்.

சென்னையை ஒட்டி அமைந்துள்ளதால் இத்தொகுதியில் சாலை, குடிநீர் வசதிகளுக்கு பஞ்சமில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் 2 ஆயிரம் சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்எல்ஏ தொகுதியில் இவ்வளவு அதிக சாலைகள் செப்பனிடப்பட்டது இத்தொகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூரில் செயல்பட்டு வந்த மதுரவாயல் தாசில்தார் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது ஆலப்பாக்கம் சாலையில் செயல்பட்டு வருகிறது. மேலும், இத்தொகுதியில் அதிகபட்சமாக 13 மினி பேருந்துகள் விடப்பட்டுள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பா.பென்ஜமின்

அதிமுக

2

ரா.ராஜேஷ்

காங்கிரஸ்

3

க.பீம்ராவ்

மார்க்சிஸ்ட்

4

என்.வி.சீனிவாசன்

பாமக

5

இரா.ஆனந்தபிரியா

ஐஜேகே- பாஜக

6

மு.வாசு

நாம் தமிழர்

அதேசமயம் பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாதது ஒரு பெரும் குறையாக உள்ளது. மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் போரூர் மேம்பாலம் கட்ட ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு அதில் ரூ.5 கோடி செலவிடப்பட்டது. அதன் பின்னர் வந்த அதிமுக அரசு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

இதையடுத்து, இத்தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் தொடர் கேள்வி எழுப்பியதையடுத்து இத்திட்டத்துக்கு ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டு தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், வானகரம், நெற்குன்றம், ஆலப்பாக்கம், சின்னபோரூர், அயப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதேபோல், முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு ஆகிய 3 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பீமாராவ் வெற்றி பெற்றார்.

29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

204127

பெண்

197877

மூன்றாம் பாலினித்தவர்

127

மொத்த வாக்காளர்கள்

402131

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பீமாராவ்

சி பி எம்

96844

2

செல்வம்

பாமக

72799

3

செல்வன்

பிஜேபி

6381

4

சிவசங்கரன்

ஐஜேகே

2256

5

யோசுவா

பிஎஸ்பி

2040

6

செல்வம் .K

சுயேச்சை

1542

7

தில்பஹதூர்

ஜேஎம்எம்

1373

8

ஆர்.ரவீந்திரன்

சுயேச்சை

855

9

தர்மராஜ்

சுயேச்சை

640

10

செந்தில்குமார்

சுயேச்சை

393

11

பாஸ்கரன்

சுயேச்சை

303

12

தமிழ் ஒளி

சுயேச்சை

296

13

சோமசுந்தரம்

சுயேச்சை

169

185925

SCROLL FOR NEXT