தருமபுரி மாவட்ட 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒன்று பாலக்கோடு. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி இதுவரை 11 சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த தொகுதியில் உள்ளது. இந்த தொகுதி சிறந்த மண் வளம், ஓரளவு நீர் வளம் கொண்டது. தக்காளி, தேங்காய், பூ போன்ற பொருட்களின் உற்பத்தி இந்த தொகுதியில் அதிகம். இந்த தொகுதியில் விளையும் இளநீர் பெங்களூரு, மகாராஷ்ட்ரா போன்ற பகுதிகளுக்கு செல்கிறது. தென்னை ஓலையில் இருந்து பிரிக்கப்படும் ஈர்க்குச்சிகள் துடைப்பமாக சேகரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்றும் இந்த தொகுதியில் இயங்குகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வரும் முன்பு தருமபுரி நகருக்கு குடிநீர் வழங்கி வந்த சின்னாறு(பஞ்சப்பள்ளி) அணை இந்த தொகுதியில் தான் உள்ளது. இந்து மதத்தில் வன்னியர், கொங்கு வேளாளர், ஆதி திராவிடர் இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பழங்குடியின மக்களும் இந்த தொகுதியில் உள்ளனர். இதுதவிர பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவு வசிக்கின்றனர். கிறித்தவர்களும் தொகுதியில் பரவலாக உள்ளனர்.
இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அதிமுக 7 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2001-ம் ஆண்டு இந்த தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் வென்ற கே.பி.அன்பழகன் தமிழக அமைச்சரவையும் உள்ளாட்சி மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து அவரே 3 முறை அந்த தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வாகி வருகிறார்.
பிரச்சினைகள்:
நிரந்தர நீராதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது இந்த தொகுதி விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பு. மழை நீர் கடலுக்கு சென்று வீணாகாத வகையில் பாலக்கோடு அடுத்த ‘தொல்லைக்காது’ என்ற பகுதியில் ஒரு அணை அமைக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக நீர்வர்த்து தடைபட்டுப் போன தும்பல அள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுவர வேண்டுமெனவும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.பி.அன்பழகன் | அதிமுக |
2 | பி.கே.முருகன் | திமுக |
3 | கே.ஜி.காவேரிவர்மன். | தேமுதிக |
4 | கே.மன்னன் | பாமக |
5 | பி.நஞ்சப்பன் | ஐஜேகே |
6 | எஸ்.வெங்கடேசன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பாலக்கோடு வட்டம் (பகுதி), பஞ்சப்பள்ளி, பெரியானூர், நம்மாண்டஅள்ளி, சின்னேகவுண்டனஅள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, திம்மராயனஅள்ளி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகஅள்ளி, ஜக்கசமுத்திரம், கிட்டனஅள்ளி, சிக்கதோரணபெட்டம், சாமனூர், போடிகுட்லப்பள்ளி, அத்திமுட்லு, கெண்டனஅள்ளி, மாரண்டஅள்ளி, சென்னமேனஹள்ளி, சிக்கமாரண்டஹள்ளி, செங்கபசுவந்தலாவ், பி.செட்டிஹள்ளி, தண்டுகாரணஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, அனுமந்தாபுரம், எலுமிச்சனஹள்ளி, முக்குளம், கும்பாரஹள்ளி, பச்சிகானப்பள்ளி, கெரகோடஹள்ளி, காரிமங்கலம், பொம்மஹள்ளி, நரியானஹள்ளி, புலிக்கல், கொண்டசாமஹள்ளி, சிக்கார்தஹள்ளி, ஜெர்த்தலாவ், கரகதஹள்ளி, பாலக்கோடு, போலபடுத்தஹள்ளி, கொட்டுமாரணஹள்ளி, நாகனம்பட்டி, பெரியாஅள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஅள்ளி, பண்டரஹள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மோலப்பனஹள்ளி, பூனாத்தனஹள்ளி, சென்றாயனஹள்ளி, தொன்னேனஹள்ளி, பைகஹள்ளி, கனவேனஹள்ளிநல்லூர், புதிஹள்ளி, பெலமாரஹள்ளி, திருமால்வாடி, பேவுஹள்ளி, சீரியனஹள்ளி, எராசூட்டஹள்ளி, பொப்பிடி, எருதுகுட்டஹள்ளி, எரனஹள்ளி, சீராண்டபுரம், குஜ்ஜாரஹள்ளி, உப்பாரஹள்ளி, ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள்.
மாரண்டஹள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,09,125 |
பெண் | 1,03,656 |
மூன்றாம் பாலினத்தவர் | 10 |
மொத்த வாக்காளர்கள் | 2,12,791 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2006 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | கே. முருகேசன் | காங்கிரஸ் | 29186 | 50.05 |
1971 | எம். வி.காரிவேங்கடம் | திமுக | 32378 | 52.84 |
1977 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 21959 | 32.87 |
1980 | எம். பி. முனிசாமி | அதிமுக | 38999 | 52.36 |
1984 | பி. தீர்த்தராமன் | காங்கிரஸ் | 55459 | 65.93 |
1989 | கே. மாதப்பன் | அதிமுக (ஜெ) | 37168 | 38.77 |
1991 | எம். ஜி. சேகர் | அதிமுக | 63170 | 62.17 |
1996 | ஜி. எல். வெங்கடாசலம் | திமுக | 56917 | 49.74 |
2001 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 75284 | 62.38 |
2006 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 66711 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | எம். பி. முனுசாமி | திமுக | 26096 | 44.75 |
1971 | பி. கே. நரசிம்மன் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 28901 | 47.16 |
1977 | கே. டி. கோவிந்தன் | ஜனதா கட்சி | 17701 | 26.5 |
1980 | ஆர். பாலசுப்ரமணியம் | காங்கிரஸ் | 34864 | 46.81 |
1984 | எம். பி. முனிசாமி கவுண்டர் | திமுக | 26045 | 30.96 |
1989 | டி. சந்திரசேகர் | திமுக | 32668 | 34.08 |
1991 | கே. அருணாச்சலம் | ஜனதா தளம் | 23911 | 23.53 |
1996 | சி. கோபால் | அதிமுக | 34844 | 30.45 |
2001 | ஜி. எல். வெங்கடாசலம் | திமுக | 35052 | 29.04 |
2006 | கே. மன்னன் | பாமக | 61867 | --- |
2006 சட்டமன்ற தேர்தல் | 57. பாலக்கோடு | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.P. அன்பழகன் | அ.தி.மு.க | 66711 |
2 | K. மன்னன் | பாமக | 61867 |
3 | P. விஜயசங்கர் | தே.மு.தி.க | 11882 |
4 | P. ராஜகோபால் | சுயேச்சை | 2612 |
5 | P.. ரவிசங்கர் | சுயேச்சை | 2356 |
6 | M. மாறன் | சுயேச்சை | 1700 |
7 | S. மதிவானன் | சுயேச்சை | 1418 |
8 | D ரமேஷ்குமார் | பி.ஜே.பி | 1181 |
9 | P. சித்தன் | சுயேச்சை | 550 |
10 | L. அந்தோனி | சுயேச்சை | 327 |
11 | M. அன்பழகன் | சுயேச்சை | 298 |
150902 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 57. பாலக்கோடு | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.P. அன்பழகன் | அ.தி.மு.க | 94877 |
2 | V. செல்வம் | பாமக | 51664 |
3 | K. ஹரிநாத் | சுயேச்சை | 2449 |
4 | P. குமாராதேவன் | பி.ஜே.பி | 1937 |
5 | M. ராமசாமி | சுயேச்சை | 1101 |
6 | M. கலைச்செல்வன் | ஐ.ஜே.கே | 874 |
7 | C. தீர்த்தகீரி | சுயேச்சை | 702 |
8 | V. முருகன் | சுயேச்சை | 667 |
9 | M. பன்னீர்செல்வம் | பி.எஸ்.பி | 659 |
10 | P. எடிசன் | சுயேச்சை | 591 |
11 | K. முருகன் | சுயேச்சை | 393 |
12 | E. அன்பழகன் | புபா | 344 |
156258 |