ஈரோடு

99 - ஈரோடு மேற்கு

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளது. தொகுதி வாக்காளர்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவு தொழிலை 50 சதவீதம் பேரும் சார்ந்துள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் இவர்களுக்கு அடுத்தபடியாக, ஆதிதிராவிடர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். முழுமையாக நிறைவேற்றப்படாத பாதாள சாக்கடை திட்டம், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு போன்றவை தேர்தலின் போது எதிரொலிக்கும். சாயக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாததும், போதுமான சாலைவசதிகள் இல்லாததும் வாக்காளர்களின் குறையாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் கடந்த தேர்தலில் உருவான தொகுதி என்றாலும், இங்கு 1984ம் ஆண்டுக்கு பின் தொடர்ச்சியாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.யுவராஜாவை (தற்போதைய தமாகா இளைஞரணி தலைவர்), அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.வி.ராமலிங்கம் தோற்கடித்து, அமைச்சரவையிலும் சில ஆண்டுகள் இடம்பெற்றார். அதன் பின் நில அபகரிப்பு குற்றச்சாட்டு காரணமாக கே.வி.ராமலிங்கத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.வி.ராமலிங்கம்

அதிமுக

2

எஸ்.முத்துசாமி

திமுக

3

என்.முருகன்

மதிமுக

4

வி.ஆறுமுகம்

பாமக

5

என்.பி.பழனிசாமி

பாஜக

6

டி.ஜோதிவேல்

நாம் தமிழர்

7

எம். ஈஸ்வரமூர்த்தி

கொமதேக

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பெருந்துறை தாலுகா (பகுதி)

வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளவேடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள்.

ஈரோடு தாலுகா (பகுதி)

கரை எல்லப்பாளையம், எலவைமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல் திண்டல், கீழ் திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மொடக்கரை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர் புதுபாளையம், நஞ்சனாபுரம், பவளதாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்,

சூரியபாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (இ) (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,26,973

பெண்

1,29,152

மூன்றாம் பாலினத்தவர்

25

மொத்த வாக்காளர்கள்

2,56,150

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.V. ராமலிங்கம்

அ.தி.மு.க

90789

2

M. யுவராஜ்

காங்கிரஸ்

52921

3

N.P. பழனிசாமி

பாஜக

3516

4

K. வெங்கடாசலம்

சுயேச்சை

1371

5

M. தமிழரசு

சுயேச்சை

1183

6

V.P. நாகராஜன்

பகுஜன் சமாஜ் கட்சி

1012

7

E. கிட்டுசாமி

புரட்சி பாரதம்

472

8

T.S.R செந்தில்ராஜன்

சுயேச்சை

438

9

V.S. செந்தில்குமார்

இந்திய ஜனநாயக கட்சி

413

10

P.N. சண்முகம்

சுயேச்சை

303

11

S. முருகானந்தம்

சுயேச்சை

262

12

R. செந்தில்குமார்

சுயேச்சை

248

13

A. கிருஸ்துராஜ்

சுயேச்சை

205

153133

SCROLL FOR NEXT