மற்றவை

அம்மா உணவகத்தில் ரேஷன் பொருள்கள்: திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ேரஷன் கடைப் பொருள்கள் அம்மா உணவகங்களுக்கு செல்கின்றன என திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டினார்.

திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து வியாழக்கிழமை திண்டுக்கல் நாகல்நகர், பேகம்பூரில் அவர் பேசியது:

கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. விலைவாசி, முதல்வர் ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரைபோல் உயர உயர பறக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு காத்து கிடப்பதே வேலையாகிவிட்டது. குடிநீருக்காக காத்து கிடக்கின்றனர். ரேஷன் பொருளுக்காக ரேஷன் கடைகளில் காத்து கிடக்கின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு மாதம் அரிசி, சீனி வழங்கினால், மறுமாதம் கொடுப்பதில்லை.

ரேஷன் பொருள்கள் அம்மா உணவகங் களுக்குச் செல்கின்றன. அதனால், எப்போது சென்றாலும் அடுத்த மாதம் வாங்கள் என ஒவ்வொரு மாதமும் ஏதாவது காரணம் கூறி பொருள்கள் வழங்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் பெண்களை அலைக்கழிக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா இந்த ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்துள்ளார். என்ன சாதனை செய்துள்ளார். எதையுமே செய்ய இந்த அரசு மக்களுக்கு தேவையா? அ.தி.மு.க. ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராக வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்ததால் தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோடியுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவும் அவரது மதச்சார்பு கொள்கைகளை கடைப்பிடிப்பவர்தான். பிறகு எப்படி இவரால் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்றார்.

SCROLL FOR NEXT