1. விளவங்கோடு – நெய்யாறு இடதுகரைக் கால்வாயைத் தூர்வாரிச் செப்பனிட்டு, கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தண்ணீர் பெற முயற்சி செய்யப்படும்.
2. நாகர்கோவில் நகரில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
3. கன்னியாகுமரியில் அய்யா வைகுண்ட சாமி அவர்களின் மணிமண்டபமும், ஆராய்ச்சி மையமும் அமைக்கப்படும்.
4. கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடலோர கிராமங்களை இணைக்கும் சாலையும், தேங்காய்பட்டினத்தில் இரையுமன் துறையில் ஒரு பாலமும், ராஜாக்கமங்கலத்தில் மற்றொரு பாலமும் அமைக்கப்படும்.
5. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை தொடங்கப்படும்.
6. டச்சுப் படையை வென்ற அனந்த பத்மநாபன் நாடார் அவர்களுக்குத் தச்சன்விளையில் மணிமண்டபம் கட்டப்படும்.
7. நாகர்கோவில் செட்டிக்குளம் அரசுப் பேருந்துப் பணிமனை சீரமைக்கப்படும்.
8. கோட்டாறில் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
9. குமரி மாவட்டம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஏ.வி.எம். கால்வாயைத் தூர்வாரி, பழங்காலத்தில் போக்குவரத்து நடைபெற்றது போல், மீண்டும் நீர்வழிப் போக்குவரத்து உருவாக்கித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.