1. நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
2. நாகூர் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
3. நாகப்பட்டினம் மேலக்கோட்டை வாசலில் புதிய பாலம் கட்டப்படும்.
4. வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும்.
5. வேதாரண்யத்தில் பழங்களைச் சேமித்து வைக்கக் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
6. நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
7. பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம் புதுப்பிக்கப்பட்டுச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும்.
8. மயிலாடுதுறையில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.
9. நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
10. மயிலாடுதுறையில் காய்கனிகள் பாதுகாப்பிற்காகக் குளிர்பதனக் கிடங்கு ஒன்று அமைக்கப்படும்.