3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனிவிமானம் மூலம் நேற்று மும்பையில் இருந்து புறப்பட்டு தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில்தொடங்குகிறது. 2-வது டெஸ்ட்ஜனவரி 3-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கிலும் 3-வது டெஸ்ட் 11-ம் தேதிகேப்டவுனிலும் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி தலைமையில் நேற்று காலை மும்பையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலையில் தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தனர்.
வீரர்கள் விமானத்தில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. இந்தத் தொடரில் காயம்காரணமாக துணை கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை.