TNadu

தமிழகத்தில் 18, 25 ஆண்டுகள் பணிபுரிந்த - 203 போலீஸாருக்கு மத்திய அரசு விருது :

செய்திப்பிரிவு

காவல் துறையில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது. இதில் 18 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு ‘உத்கிருஷ்ட சேவா பதக்’ விருதும்,25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு ‘அதி-உத்கிருஷ்ட சேவா பதக்’ விருதும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழக கமாண்டோ படை எஸ்.பி. ரமேஷ், லஞ்சஒழிப்பு துறை ஏஎஸ்பி பிரித்விராஜன், 4 டிஎஸ்பிக்கள், 9 ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள் உட்பட74 பேருக்கு ‘அதி-உத்கிருஷ்ட சேவாபதக்’ விருது வழங்கப்படுகிறது.

சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜி சரவணன், எஸ்பிசிஐடி எஸ்பி சாமிநாதன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி கமாண்டன்ட் தீபா, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பிஜான் லியோ, சேலம் மாநகர உதவிஆணையர் நாகராஜன், 29 ஆய்வாளர்கள், 32 உதவி ஆய்வாளர்கள், 3 ஹவில்தார், 60 தலைமைக் காவலர்கள் உட்பட 129 பேருக்கு ‘உத்கிருஷ்ட சேவா பதக்’ விருது வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT