Regional01

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம் :

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் மதுரை வந்தார்.

இதனிடையே ஆளுநர் ரவி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மனைவியுடன் நேற்று காலை 6.30 மணி அளவில் வந்தார். அம்மன் சன்னதியில் அவரை தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

பின்னர் மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் ஆளுநரும், அவரது மனைவியும் தரிசித்தனர்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT