நடராஜன். 
Regional01

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது :

செய்திப்பிரிவு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜமந்திரிபட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கிராமிய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துறையினர் விரைந்து சென்று நடராஜன் (35) என்பவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, சில நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் நடராஜனை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக பரவக்கல் பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் காவலாளி யாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. வன விலங்குகளை வேட்டை யாடுவதற்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த காவல் துறை யினர் நடராஜனையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT