TNadu

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு :

செய்திப்பிரிவு

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ கத்தில் நேற்றைய நிலவரப்படி, அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் தலா 3 செ.மீ, தென்பரநாடு (திருச்சி), மரக்காணம்(விழுப்புரம்), புவன கிரி (கடலூர்),அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மயிலாடுதுறை, அமராவதி அணை (திருப்பூர்), பர்லியார் (நீலகிரி) தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வடமாவட்டங்கள் மற்றும்புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை (டிச. 17-ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

SCROLL FOR NEXT