TNadu

திமுக உட்கட்சி தேர்தல் எப்போது? கே.என்.நேரு தகவல் :

செய்திப்பிரிவு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சரானால் அது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜன.25-க்குள் நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமும் ஆலோசித்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகள் உட்பட அனைத்து நகர் பகுதியிலும் தேர்தல் நடத்தப்படும். இத்தேர்தல் முடிந்த பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT