கவுசிக ஏகாதசியை முன்னிட்டு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம். 
Regional01

கவுசிக ஏகாதசியை முன்னிட்டு வில்லிபுத்தூர் - ஆண்டாள் கோயிலில் 108 போர்வை சாற்றும் வைபவம் :

செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை 108 போர்வை சாற்றும் (பட்டுப் புடவை அணிவிக்கும்) வைபவம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, தேவி கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப் புடவைகள் சாற்றும் வைபவம் நடக்கும். அதேபோல், நேற்று முன்தினம் கவுசிக ஏகாதசி என்பதால் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய 108 புடவை அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது.

இதற்காக, நேற்று முன்தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மேள தாளம் முழங்க பெரிய பெருமாள் சன்னதி பகல்பத்து மண்டபத் துக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து ஆண்டாள், ரங்க மன்னார், கருடாழ்வார், பெரி யபெருமாள், பூமாதேவி, தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன்பின் 108 பட்டுப் புடவைகள் அணிவிக்கும் வைபவம் தொடங்கியது. அப்போது கவுசிக புராணம் வாசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT