Regional01

ஈரோட்டில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது : நடப்பாண்டில் காவல்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, ஜாமீனில் வர முடியாத அளவுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 23 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருட்டு, வழிப்பறி, கொலை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க, எஸ்.பி. சசிமோகன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்று விரைவில் ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கவுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT