Regional02

110 வாகனம் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் கனிமப் பொருட்கள் மற்றும் பிற சரக்குகளை விபத்து ஏற்படுத்தும் வகையில், அதிக பாரம் ஏற்றிச் செல்வது அதிகரித்து வருகிறது. கேரளா வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி, அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து, அவற்றை சோதனை செய்யும்நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்றுஒரே நாளில் நடந்த சோதனையில், அதிக பாரம் ஏற்றி வந்ததாக 110 லாரி, டெம்போக்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தில்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த வாகனங்களுக்க ரூ.3 லட்சத்து 850 அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம்முழுவதும் கனரக வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT