Regional01

எருது விடும் விழாவுக்கு மனு :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலை மையில் எருது விடும் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 182 இடங்களுடன் புதிதாக 20 இடங்களில் விழாக்கள் நடத்த அனுமதி கோரி மனுக்கள் அளித்துள்ளனர்.

அதேபோல், ஒரு ஊரில் ஒரே ஒரு எருது விடும் விழா மட்டும் நடத்த அனுமதி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப் பிக்க முடியாதவர்கள் நேரில் அளித்த மனுக்களுக்கும் அனுமதி வழங்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கூட்டத்தில் எருது விடும் திருவிழா குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT