Regional02

‘பசுமை தமிழ்நாடு’ திட்டம் தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு :

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தொடங்கி, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், “பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கு காவேரி கூக்குரல் இயக்கம் தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. இத்திட்டம் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கும்,மாநிலத்தில் செழிப்பையும், நல் வாழ்வையும் அதிகரிப்பதற்கும் மிகவும் அவசியம். தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT