Regional03

வீடுகளை சேதப்படுத்திய யானைகள் :

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடு மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சின்னக்கல்லாறு தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் ராஜன் மற்றும் பிரேமா இருவரும் வால்பாறையில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் இருவரது வீடுகளின் சுவர்களையும் தந்தத்தால் குத்தி இடித்து, உள்ளே நுழைந்த நான்கு யானைகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT