Regional01

ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியானது :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்தது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்தது. மாலை அளவீட்டின்போதும் அதே அளவுடன் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

SCROLL FOR NEXT