Regional02

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊக்கத் தொகை கிடைக்காமல் ஏமாற்றம் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இக்கட்டான காலக்கட்டத்தில் மிகவும் ஆபத்தான பணியில் ஈடுபட்ட இவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கரோனா 2-ம் அலை தீவிரமாக இருந்தபோது காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் தனி வார்டுகள் உருவாக்கப்பட்டன. அப்போது அந்த வார்டில் ஒப்பந்த அடிப்படையில் 116 பேர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றினர். வைரஸ் பரவலால் பலர் மடிந்த நேரத்தில் இவர்களின் பணி மிகவும் சவால் நிறைந்தது.

இந்த நேரத்தில் மருத்துவத் துறையில் பணிபுரிவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவித்தது. இந்த ஊக்கத் தொகை தங்களுக்கும் கிடைக்கும் என்று இவர்கள் நம்பி இருந்தனர். ஆனால், இதுவரை இவர்களுக்கு ஊக்கத் தொகை வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த இவர்கள் மருத்துவத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் முறையிட்டனர். அவர்கள் ஊக்கத் தொகை கேட்டு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT