வசந்தராணி 
Regional01

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் - டெவலப்மெண்ட் கவுன்சில் தலைவர் நியமனம் :

செய்திப்பிரிவு

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளை சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைத்து கடந்தஇரு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 5 மாவட்டங்களில் உள்ள75-க்கும் மேற்பட்ட உறுப்புகல்லூரிகளை நிர்வாகிக்க, கல்லூரி டெவலப்மெண்ட்கவுன்சில் துறை தலைவராகஅண்ணாமலை பல்கலைக்கழக இயற்பியல்துறை பேராசிரியர் வசந்தராணியை (59) பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.

இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 75 க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்வார். கல்லூரி டெவலப்மண்ட் கவுன்சில் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட வசந்தராணியை பல்கலைக்கழகபேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT