Regional01

ஆட்டோ கவிழ்ந்ததில் : பாமகவினர் : 11 பேர் காயம் :

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் நேற்று பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாமகவினர் பங்கேற்று விட்டு, ஆட்டோ ஒன்றில் நேற்று மாலை ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார்மோதியதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொன்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, பழனி, சோபன்பாபு, கணேசன், வீரப்பன், சுப்பிரமணி, நாகராசு, பாலு, கோபாலகிருஷ்ணன், குணசேகர், நாவப்பன் ஆகிய 11 பேர் காயமடைந்தனர். காய மடைந்தவர்கள் அக்கம்பக் கத்தினர் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT