ராஜபாளையம் அருகே உள்ள அசையாமணி விளக்கு பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
ராஜபாளையம் தேவதானம் அருகே உள்ள அசையாமணி விளக்குப் பகுதியில் ராமேஸ்வரன் என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் 10 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே விலங்குகள் நல ஆர்வலர் கார்த்திக் என்பவர் அங்கு வந்து மலைப்பாம்பை பிடித்தார். பின்னர், வனத்துறையினரிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. அதனை சாஸ்தா கோயில் வனப் பகுதியில் கொண்டு சென்று வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.