விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்ட அரசு-தனியார் ஐடிஐ-களில் 2021-ம் ஆண்டுக்கான ஓராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் நவ.30 வரை நேரடிச் சேர்க்கை நடந்தது. தற்போது மேலும் காலியாக உள்ள கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நேரடிச் சேர்க்கை மூலம் பயிற்சியில் சேர இம்மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். இந்நேரடி சேர்க்கைக்கு தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உரிய இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பித்து பயிற்சிக்கான சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 04562-294382, 252655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.