Regional02

பணியிலிருந்து நீக்கப்பட்ட மதுரை மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சியில் முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதியப் பணியாளர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியின் கீழ் பொறியாளர் பிரிவு, துப்புரவு, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியக்கூடிய தொகுப்பூதிய பணியாளர்கள் 150 பேர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், பணியாளர்களுக்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும், கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT