Regional02

ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கு டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: விருது நகர் மாவட்ட அரசு-தனியார் ஐடிஐ-களில் 2021-ம் ஆண்டுக்கான ஓராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் நவ.30 வரை சேர்க்கை நடந்தது. தற்போது காலியாக உள்ள கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நேரடிச் சேர்க்கை மூலம் பயிற்சியில் சேர இம்மாதம் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்குமேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். நேரடி சேர்க்கைக்கு தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் சென்று உரிய இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பித்து பயிற்சிக்கான சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 04562-294382, 252655-ல் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT