Regional02

கள் இறக்க அனுமதி கோரி போராட்டம் நாடார் வாழ்வுரிமை சங்கம் அறிவிப்பு :

செய்திப்பிரிவு

ஈரோடு: அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில், கொங்கு குணாளன் வரலாறு மீட்பு பொதுக்கூட்டம் மற்றும் சங்கத்தின் கொடி அறிமுக விழா கோபி அருகில் உள்ள கொளப்பலூரில் நடந்தது. விழாவிற்கு கே.பி.முத்துசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஏ.என்.சதாநாடார், சங்கத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, நாடார் சமுதாய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கள்ளை இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதற்காக அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

இதில் சங்கத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மகளிர் அணி தலைவி ஜோதிமணி, கொங்கு மண்டல நாடார் உறவின் முறை செயலாளர் வடிவேலு, டி.வேல்முருகன், விஜயராஜ், மகளிர் அணி அருணாதேவி, கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT