Regional02

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,400 கனஅடியாக குறைந்தது :

செய்திப்பிரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,400 கனஅடியாக குறைந்தது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரைப் பொருத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,400 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11,400 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து நீர் மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.

SCROLL FOR NEXT