Regional03

சிறுமியை திருமணம் செய்தவர் கைது :

செய்திப்பிரிவு

குமாரபாளையம் காவேரி நகரைச் சேர்ந்தவர் மயிலரசன் (22). கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் குமாரபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைத் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மயிலரசனை குமாரபாளையம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT