திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புனரமைக்கப்பட்ட தங்க ரதம் உலா இன்று(டிச.15) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சீ.செல்வராஜ் வெளியிட்ட செய் திக் குறிப்பு: சமயபுரம் மாரி யம்மன் கோயிலில் பழுதாகி யிருந்த தங்க ரதம் தற்போது புனரமைக்கப்பட்டு, தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் மீண்டும் தங்க ரத உலா நடத்தப்படவுள்ளது.
இந்த தங்க ரதத்தில் அம்பாள் எழுந்தருளி கோயில் வெளிப்பிரகாரத்தில் வலம் வருவார் என அவர் தெரிவித் துள்ளார்.