நிஷி தேவ அருள். 
Regional02

தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு - கே.ஆர்.கல்லூரி மாணவர்கள் 2 பேர் தேர்வு :

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் நடைபெறும் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

கோவில்பட்டியில் நாளை (16-ம் தேதி) 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான தமிழ்நாடு அணி வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது. இதில், கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 3-ம் ஆணடு வணிகவியல் துறை மாணவர் அரவிந்குமார், 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் நிஷி தேவ அருள் ஆகியோர் தமிழ்நாடு அணிக்காக தேர்வு பெற்றுள்ளனர். நிஷி தேவ அருள் தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்.

அரவிந்குமார், நிஷி தேவ அருள் ஆகியோரை கல்லூரி தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி செயலாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி முதல்வர் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநர் ஆர்.ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT