Regional02

போதையில் தகராறு போலீஸ்காரர் கைது :

செய்திப்பிரிவு

மதுபோதையில் பீர் பாட்டிலுடன் தகராறு செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகுரு. கடையநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிகிறார். இவர், சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். அங்கு மது போதையில் கையில் பீர் பாட்டிலுடன் தகராறு செய்துள்ளார். இதை தட்டிக் கேட்டவர்களை தரக்குறைவாக பேசி பீர் பாட்டிலால் தாக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. போலீஸ்காரர் ராஜகுருவை, சேர்ந்தமரம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT