சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதயதின விழா கொண்டாடப்பட்டது. 
Regional04

அகிலத்திரட்டு உதயதினம் கொண்டாட்டம் :

செய்திப்பிரிவு

அய்யா வைகுண்டரின் அறநெறி தத்துவங்கள் அடங்கிய அகிலத் திரட்டு நூல், அய்யாவழி பக்தர் களின் புனித நூலாகத் திகழ்கிறது.

அகிலத்திரட்டு நூலை, அய்யா வைகுண்டர் உலகுக்கு அருளிய தினமான கார்த்திகை 27-ம் தேதி, அகிலத்திரட்டு உதய தினமாக கொண்டாடப்படுகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாலஜனாதிபதி தலைமை வகித்தார்.

அகிலத்திரட்டு சுவடிகளை கைகளில் ஏந்தியபடி, சாமிதோப்பு தலைமைப்பதி மற்றும் பள்ளி அறையை சுற்றிவந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைச் செயலாளர் ராஜன், பால லோகாதிபதி கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT