ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப் பம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் (68). இவர், தனது வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பியுள்ளதா? என பார்க்கச்சென்றபோது, தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகர் உயிரிழந்தார்.