ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் குழுவினருக்கு நேற்று கடனுதவிகளை வழங்கிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர். அடுத்த படம்: காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமலு உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கடைசிப்படம்: திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் குழுவினருக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி ஆகியோர் வழங்கினர். 
Regional02

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 4,828 மகளிர் குழுவினருக்கு ரூ.239.21 கோடி கடனுதவி : அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வழங்கினர்

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 4,828 மகளிர் குழுவினருக்கு ரூ.239.21 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் மாவட்ட அளவில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் மகளிர் குழுவின் மரப்பொம்மைகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான அமைச்சகத்தின் கீழ் திட்ட செயலாக்க அலகாக அங்கீகரிக்கப்பட்டு ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழில் பகுதிகள் ஏற்படுத்தி சுமார் 1,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர்

இதில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் பொருளாதார முடிவுகளை ஆண்கள் எடுத்தனர். அதை மாற்றிய திட்டம் மகளிர் சுய குழுக்கள்தான். மாநிலத்தின் வளர்ச்சியில் பெண்களை அதிகளவில் பங்கேற்க வைத்ததும் இந்த குழுக்கள்தான். ஒரு கடைக்குச் சென்றால் பிரபல நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை பார்க்கிறோம். அதே பொருட்களை நம்மூரில் உள்ள குழுக்கள் தயாரிப்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கிராமங்கள் அளவில் செயல்படும் மகளிர் குழுவினர் புதிய உற்பத்தி பொருட்களை தயாரிக்க திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுத்தால் அதற்கு மாவட்ட நிர்வாகம் ஆதரவு அளித்து கடனுதவி பெற்றுத்தரப்படும். மகளிர் குழுவினர் தயாரிப்பு பொருட்களை மாதம் ஒருமுறை கண்காட்சி மூலம் விற்பனை செய்ய வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT