TNadu

1,130 ஐஐடி மாணவர்களுக்கு வளாக நேர்காணலில் பணி :

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியில் இறுதி ஆண்டுமாணவர்களுக்கான முதல்கட்ட வளாக நேர்காணல் கடந்த வாரம்நடந்து முடிந்தது. 226 இந்திய நிறுவனங்கள் மூலம் 1,085 பேருக்கும், 14 வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக 45 பேருக்கும் என மொத்தம் 1,130 பேருக்கு வேலைக்கான உத்தரவு கிடைத்துள்ளது.

வளாக நேர்காணலுக்கு பதிவு செய்திருந்த மாணவர்களில் 73 சதவீதம் பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். வளாக நேர்காணலில்வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 45 பேருக்கு வேலை கிடைத்திருப்பதும், முதல்கட்ட வளாக நேர்காணல் மூலமாக 1,085 பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதும் சென்னை ஐஐடி வரலாற்றில் சாதனை ஆகும்.

2-வது கட்ட நேர்காணல் வரும்ஜனவரி 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இதுகுறித்து ஐஐடி ஆலோசகர் (வளாக நேர்காணல்) சி.எஸ்.சங்கர் ராம்கூறும்போது, ‘‘வளாக நேர்காணலில் அதிக மாணவர்கள் தேர்வாகியிருப்பது ஐஐடி கல்வியின் தரத்தையும், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. வளாக நேர்காணல் மூலம் எங்கள் மாணவர்களை பணிக்கு தேர்வுசெய்துள்ள நிறுவனங்களுக்கு நன்றி. 2-வது கட்ட வளாக நேர்காணலில் இன்னும் அதிக நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT