Regional01

சமூக வலைதளத்தில் பழகி ஏமாற்றி - பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் பறிப்பு :

செய்திப்பிரிவு

சமூக வலைதளம் மூலம் பழகி ஏமாற்றி, மதுரை இளம் பெண்ணிடம் ரூ.2.50 லட்சம், 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடியைச் சேர்ந்த 21 வயது பெண். இவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்தார்.

இதன்மூலம் கடந்த ஆகஸ் டில் செர்பி ஜோசப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி கருத்துகளை பகிர்ந்தனர்.ஒரு கட்டத்தில் செர்பி ஜோசப் அப்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செர்பி ஜோசப் அப்பெண்ணிடம் தனியார் ஆப் மூலம் ரூ.2.50 லட்சம் வரை பெற்றுள் ளார். சமீபத்தில் கோயிலுக்கு அப்பெண்ணை வரவழைத்து 5 பவுன் தங்கச்சங்கிலியை வாங்கிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு, தனது மொபைல் போன் இணைப்பைத் துண் டித்தார். இதனால், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அப்பெண் அவனியாபுரம் போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் செர்பி ஜோசப் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT