Regional03

மதுரையில் பிரதமரின் - காசி நிகழ்வு 18 இடங்களில் நேரடி ஒளிபரப்பு :

செய்திப்பிரிவு

மதுரையில் பிரதமரின் காசி நிகழ்வு 18 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுப்பித்த காசி விஸ்வநாதர் ஆலய சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜை நேரலை மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் 18 மண்டல்களில், கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் பகுதியில் ராம்தேவ் பவனில் மாவட்ட தலைவர் டாக்டர் பா. சரவணன், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்ஸ், மண்டல் தலைவர் சரவணன், கார்த்திக் பிரபு, மார்க்கெட் கண்ணன், மோகன்குமார், ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் காசி நிகழ்ச்சியை நேரலையில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT