Regional04

ஆன் லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு - ரூ.6 லட்சத்தை இழந்த தேனி பெண் :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், போடி அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சங்கீதா. பட்டதாரியான இவர் ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட சமூக வலைதளங்களில் விவரம் தேடினார். அப்போது வாட்ஸ்ஆப் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்ய முன்பணம் செலுத்துமாறும் விற்றபிறகு முன் தொகையும், கமிஷனும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொருட்களின் விலை குறைவாக இருந்ததால் அவற்றை விற்று தொகையையும் பெற்றுள்ளார்.

ஆனால், அடுத்தடுத்து அதிக மான தொகையுடன் பொருட் களை விற்க வலியுறுத்தப் பட்டது. அந்த வகையில் ரூ.5.32 லட்சத்தை சங்கீதா இழந்துள்ளார்.இம்மோசடி குறித்து அவர் தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். இதேபோல் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் ரூ.1.17 லட்சத்தை இழந்தார்.இப்புகார்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் ரெங்கநாயகி விசாரிக்கிறார்

SCROLL FOR NEXT