Regional04

நத்தம் அருகே வீடுகளில் திருடியவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த கிராம மக்கள் :

செய்திப்பிரிவு

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பிரபு, சக்திவேல் ஆகியோர் கூச்சலிட்டனர். உடனடியாக கிராம மக்கள் திரண்டு வந்து திருடர்களை விரட்டிப் பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார், இருவர் தப்பிவிட்டனர். பிடிபட்டவரிடம் கிராம மக்கள் விசாரித்ததில், அவர் மதுரை மாவட்டம் பூசாரிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வினோத் (25) எனத் தெரிய வந்தது. தன்னுடன் திருட்டில் ஈடுபட்டவர்கள் பட்டணத்தைச் சேர்ந்த அருள்முருகன், ஒத்தக்கடையைச் சேர்ந்த ரூபன் என வினோத் தெரிவித்தார்.

இதையடுத்து நத்தம் போலீஸாரிடம் வினோத்தை கிராம மக்கள் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT