திருப்பத்தூர் அருகே விபத்தில் சேதமடைந்த போலீஸ் பாதுகாப்பு வாகனம். 
Regional04

சட்ட அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் : கவிழ்ந்து 5 போலீஸார் காயம் :

செய்திப்பிரிவு

தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியை மதுரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக போலீஸ் பாதுகாப்பு வாகனம் புதுக்கோட்டையிலிருந்து சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிறுகூடல்பட்டி விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இதில், போலீஸார் சிவகுருநாதன், பாலசுப்பிரமணியன், குணசேகரன், விக்னேஷ், கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கீழசெவல்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT