அருமனையை அடுத்த மேல்பாலை குழியோல்விளையைச் சேர்ந்தவர் சுஜித். ராணுவ வீரரான இவர், இடைக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
அவரது தனிப்பட்ட வீடியோக்களை வைத்திருந்த சுஜித், அவற்றைசமூக வலை தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த சுஜித்தின் நண்பர்களும் மாணவியை மிரட்டியுள்ளனர். பயந்து போன மாணவி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுஜித், அவரது நண்பர்கள் ஜாண்பிரிட்டோ, கிரீஷ், லிபின்ஜாண் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஜாண் பிரிட்டோ, லிபின்ஜாண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.