திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சே.கருணாநிதி(45). இவர், தற்போது அயல் பணியில் திருச்சி மாநகர ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் பிற்பகலில் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் மனநலம் குன்றிய 25 வயது பெண்ணிடம் கருணாநிதி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்து, அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமைக் காவலர் கருணாநிதியைக் கைது செய்து, நேற்று லால்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.
கூலித்தொழிலாளி கைது