Regional03

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வி.திருவள்ளுவன் பொறுப்பேற்பு :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத் தலைவர் வி.திருவள்ளுவனை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிச.11 -ம் தேதி ஆணை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் நேற்று பொறுபேற்றுக் கொண்டார். அவருக்கு பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, அதன் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பாடுபடுவேன். பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் அடிப்படை நலனுக்காக அனைத்து உதவிகளையும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியையும் தமிழக அரசுடன் கலந்தாலோசித்து செய்வேன். பல்கலைக்கழக மானியக் குழுவின் பல்வேறு உத்தரவுகளால் இப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தடைப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

SCROLL FOR NEXT