கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ராஜீவ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்குச்சென்ற இவர் மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதுகுறித்துசிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில்புகார் அளித்தனர். இந்நிலையில் சிறுமியை தீத்தாம்பட்டியைச்சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தி தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் மீட்டு சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கோவில்பட்டி மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.