Regional01

கிண்டி ரயில் நிலையத்தில் புதிய மேம்பால பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இருக்கும் கிண்டி ரயில் நிலையத்தில் அலுவலக நேரங்களில் மட்டுமல்லாமல், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால், மக்கள் வந்து செல்ல போதிய அளவில் வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. குறிப்பாக, ரயில் இறங்கியவுடன் நடைமேம்பாலத்தை கடந்து செல்லவே சுமார் 15 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம், ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல பயணிகள் கஷ்டப்படுகின்றனர். எனவே, இங்கு புதிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்ல ரூ.2 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. எனவே, அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT