Regional01

நீர்ப் பாசன குழாய்கள் வாங்க 2,000 விவசாயிகளுக்கு மானியம் : ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

நீர் பாசனத்துக்கு குழாய்கள் வாங்குவதற்காக 2,000 விவசாயிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்கள் நிலமேம்பாட்டுக்குக்காக ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்த புதிய மோட்டார் வாங்குவதற்காக 2,000 பேருக்கு மானியம் வழங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, குழாய்கள் வாங்குவதற்கான மானிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் உள்ள 1,300 ஆதிதிராவிடர் மற்றும் 700 பழங்குடியின விவசாயிகள் தங்கள் வேளாண் நிலத்தில் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.3 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது.

இதில், ரூ.1.30 கோடி செலவினம் மத்திய அரசு நிதியிலிருந்தும், ரூ.1.70 கோடி செலவினம் மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT