Regional02

மதுபோதையில் ஒருவர் கொலை :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் நேற்று பலத்தகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் ஒருவர் இருந்தார்.‌ செங்கல்பட்டு நகர போலீஸார் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிந்தது. போலீஸ் முதற்கட்ட விசாரணையில் அவர் செங்கல்பட்டு நகரில் பாட்டில்களை பொறுக்கி விற்பனை செய்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில், அந்த நபரை கல்லால் அடித்துக் கொன்றதாக அஜித்குமார் கூறியுள்ளார். இறந்த நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT